த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: கட்சி அலுவலகத்தில் இன்று நடக்கிறது

பனையூரில் உள்ள கட்சி அலுவலக்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்து வருகிறார். இதற்காக அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை கோவையில் நடத்தினார். அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத் தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கடந்த 26, 27ம் தேதிகளில் நடந்தது.

இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார்.

நிர்வாக ரீதியான 120 மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் சட்டசபை தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தெரு முனை பிரசாரங்களை முன்னெடுப்பது, மக்கள் பிரச்சினைகளை முன் நிறுத்தி போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. மாவட்ட அளவில் கட்சியின் வளர்ச்சி பணிகள், மக்கள் ஆதரவு குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜய்யிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விஜய் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com