பனையூரில் நாளை த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்


பனையூரில் நாளை த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
x

தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள 12 உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

சென்னை,

சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாகியுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்த த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை இறுதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அந்த வகையில் த.வெ.க. தேர்தல் அறிக்கை குழு கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள 12 உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இல்லாத மக்கள் குறைகளை தீர்க்கும் வழிகள், வளர்ச்சி திட்டங்கள் இடம் பெறுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை வழங்குகின்றனர்.

1 More update

Next Story