தவெக தேர்தல் அறிக்கை; வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. - ஆதவ் அர்ஜுனா

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என ஆதவ் அர்ஜுனா கூறினார்.
தவெக தேர்தல் அறிக்கை; வாகை சூடும் வரலாறு திரும்புகிறது.. - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

"அறம், பொருள், இன்பம்" என்ற தமிழர் வாழ்வியலை நெறியாக ஏற்று, "மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கைகள்" என்ற கருத்தியலைக் கட்டமைப்பாக முன்வைத்து, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நமது தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான "வெற்றித் தமிழ்நாடு" எனும் மக்கள் தேர்தல் அறிக்கையை வெற்றித் தலைவர் நேற்று வெளியிட்டார்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். தமிழ் நிலத்தின் அறத்தைச் சங்க கால வரலாறு சொல்கிறது; தமிழ்நாட்டின் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தைச் சமூகநீதி சரித்திரங்கள் காட்டுகின்றன. அத்தகைய, வாகை சூடும் வரலாறு இப்போது திரும்புகிறது.

'சாதாரண மக்களுக்கான வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், இளைஞர் மேம்பாடு, முறைகேடுகளற்ற நிர்வாகம் மற்றும் அனைவருக்குமான நல்லாட்சி' ஆகியவை அடங்கிய தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கான சாட்சியம் இந்த மக்கள் தேர்தல் அறிக்கை.

வெற்றித் தலைவர் அவர்கள் முதல்-அமைச்சராக வெல்வார்!

தமிழக வெற்றிக் கழகம் மக்களாட்சியைப் படைக்கும்!

வாகை சூடுவோம், வரலாறு படைப்போம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com