தவெக கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தவெக கொடி விவகாரம் தொடர்பாக விஜய் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தவெக கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, தெண்டை மண்டல சான்றேர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி அமர்வு, சிவப்பு, மஞ்சள்,சிவப்பு நிற கொடியை பயன்படுத்த தவெகவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வில் பச்சையப்பன் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், ஜி.ஜெயச்சந்திரன், எம்.சுதீர்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க தவெக தலைவர் விஜய்க்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com