சென்னையில் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம்

விஜய் தலைமையில் சென்னையில் வரும் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம்
Published on

2026 தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அந்த வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் சட்டசபை தேர்தலுக்கான முன்னெடுப்புகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தில் படிப்படியாகக் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான பணிகளை த.வெ.க. தலைவர் விஜய் முழு வீச்சில் செய்து வருகிறார்.

இந்நிலையில், விஜய் தலைமையில் சென்னையில் வரும் 28-ந்தேதி த.வெ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் காலை 9 மணிக்கு த.வெ.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com