‘த.வெ.க. அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் கொடுக்க வேண்டும்’-அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் ஊழல் கட்டுக்குள் வருகிறது என்றால் நாகரிக குடிமகனாக நான் வரவேற்கிறேன் என்று அண்ணாமலை கூறினார்.
‘த.வெ.க. அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் கொடுக்க வேண்டும்’-அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு
Published on

'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் நடந்த அமைப்பின் அறி முக கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- டி.ஆர்.பாலு என் மீது தொடர்ந்த அவதூறு வழக்கை அவராக தான் கோர்ட்டில் திரும்ப பெற்றார். அதில் நான் எந்த சமரசமும் செய்யவில்லை. நான் சொன்னது எல்லாம் உண்மை. நான் பேசியதில் இருந்து மாறப்போவது இல்லை.

ஓராண்டு கால அவகாசம்

தமிழகத்தில் ஊழல் கட்டுக்குள் வருகிறது என்றால் நாகரிக குடிமகனாக நான் வரவேற்கிறேன். எந்த ஒரு அரசு வந்தாலும் ஓராண்டு கால அவ காசம் கொடுக்க வேண்டும். நாம் ஆதரவு கொடுப்போம். நல்ல திறம்பட செயல்படட்டும். தடைக்கல் போட வேண்டாம்.

தமிழ்நாட்டில் வரவுக்கும், செலவுக்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது. இதனை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அதனால் புதிதாக வந்துள்ள த.வெ.க. அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் கொடுக்க வேண் டும். அமைச்சர்களில் புதிதாக வந்தவர்களில் பாதி பேர் கவுன்சிலராக கூட இருந்ததில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். த.வெ.க. அரசு தமிழ்நாட்டில் நல்லது செய்கிறார்கள் என்று நாம் முதல் ஆளாக வரவேற்க போகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com