தவெக தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது; ஆனால்.... துரை வைகோ பேட்டி


தவெக தலைவர் விஜய்க்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது; ஆனால்.... துரை வைகோ பேட்டி
x

2026 தேர்தலில் 10 தொகுதிகள் வேண்டும் என்று வைகோ கேட்டுள்ளார் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று துரை வைகோ கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு துரை வைகோ எம்.பி. பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடாமல் அவரவர் சின்னங்களில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைமை முடிவு செய்ய வேண்டும். 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்ட பல கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நிலையில் கூட்டணி தலைமை இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. கணிசமான வாக்குகள் பிரியும். தி.மு.க.வுக்கு மாற்று நாங்கள்தான் என்று விஜய் கூறுவது அவருடைய ஜனநாயக உரிமை. ஆனால் எங்களை பொறுத்தவரை மற்ற கட்சிகளை நாங்கள் பொருட்படுத்தவில்லை. தி.மு.க. கூட்டணிக்கு அவரது வருகையால் எந்த விதமான பாதிப்பும் இல்லை.

2026 தேர்தலில் 10 தொகுதிகள் வேண்டும் என்று வைகோ கேட்டுள்ளார் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது. இருப்பினும் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். அண்ணாமலை மற்றும் என்னுடைய ஆட்டத்தை இனி தான் பார்க்கப் போகிறீர்கள் என்று பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, அண்ணாமலை ஆடிய ஆட்டத்தை கடந்த தேர்தலில் நாங்கள் பார்த்தோம். பா.ஜனதா தனியாக களத்தில் நின்றால் அவர்களுடைய உண்மையான வாக்கு சதவீதம் என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story