தவெக தலைவர் விஜய், நிர்வாகிகளுடன் 4 நாட்கள் ஆலோசனை

நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தவெக தலைவர் விஜய், நிர்வாகிகளுடன் 4 நாட்கள் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக். 27ம் தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தார். நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த உள்ளார். நாளை முதல் 4 நாட்களுக்கு கட்சி நிர்வாகிகளுடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார். நிர்வாகிகள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளிடம் விஜய் நேர்காணல் நடத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com