தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் இருக்கையில் தவெக தலைவர் விஜய் !

தவெகவின் வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் இருக்கையில் தவெக தலைவர் விஜய் !
Published on

சென்னை,

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சென்னை தலைமை செயலகம் வந்தார் முதல்-அமைச்சர் விஜய். முன்னதாக அங்கு அளித்த காவல்துறை மரியாதையை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார். முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தற்காலிக சபாநாயகருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெற உள்ளது.

அண்ணா.. எம்.ஜி.ஆர். வரிசையில் கட்சி தொடங்கி 27 மாதங்களில் ஆட்சிக்கு விஜய் வந்துள்ளார். இந்த வெற்றி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com