அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை

அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம் என விஜய் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு தவெக தலைவர் விஜய் மலர்தூவி மரியாதை
Published on

சென்னை,

தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக எளியவர்களுக்கும் அதிகாரம் வழங்கி, எல்லோருக்கும் சட்ட உரிமைகள் கிடைக்க அடித்தளம் அமைத்தவர், நம் கொள்கைத் தலைவர் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர். அவரது நினைவுநாளை முன்னிட்டு, நமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.

அண்ணல் அம்பேத்கர் காட்டிய வழியில், சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மையைப் பேணிப் பாதுகாக்க உறுதியேற்போம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com