மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்

தவெக மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறுகிறது.
மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்
Published on

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் தவெக 2ம் மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறுகிறது.

மதுரையின் பாரபத்தியில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், குடிநீர் வசதி, பெண்களுக்கென பிங்க் ரூம் வசதி உள்பட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மாலை மதுரை சென்றடைந்தார். நாளை நடைபெறும் தவெக மாநில மாநாட்டில் பங்கேற்க அவர் இன்றே மதுரை சென்றடைந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் மதுரை சென்றடைந்த விஜய் வீரகனூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று இரவு தங்குகிறார். அதன்பின், நாளை மாநாடு நடைபெறும் பாரபத்திக்கு செல்கிறார். நாளை நடைபெறும் தவெக மாநில மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com