

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு. திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்க யம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க. சார் பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை திருப்பூரில் பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் கோவைக்கு விஜய் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவினாசி வந்தடைகிறார். அதன்பிறகு மதியம் 3 மணிக்கு ஆட்டையாம்பாளையம் பிரிவில் இருந்து பிரசார வாகனத்தில் சென்று அவினாசி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோடு ஷோ சென்று வேனில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் நால்ரோடு சென்று அங்கு பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து பூலுவப்பட்டி வரை ரோடு ஷோ நடத்தி பிரசாரம் மேற் கொள்கிறார். இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பிரசாரம் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரசாரத்தை முன்னிட்டு விஜய் வரும் சாலை மற்றும் பிரசாரம் மேற்கொள்ளும், அவினாசி, பெருமாநல்லூர், பூலுவப்பட்டி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரி கள் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில் தர்மபுரியில் இன்று விஜய் பிரசாரத்தை திடீரென த.வெ.க. ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் தொண்டர் கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.