இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய் - அடுத்தது என்ன?

ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு எண்ணுடன் தன்னை வந்து சந்திக்குமாறு கவர்னர் கூறியிருந்தார்.
இன்று மாலை கவர்னரை சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய் - அடுத்தது என்ன?
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் த.வெ.க.வுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.

முன்னதாக, த.வெ.க. தலைவர் விஜய், நேற்று முன்தினம் மாலை தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.

தொடர்ந்து நேற்றும் கவர்னரை விஜய் சந்தித்திருந்தார். அப்போது, ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு எண்ணுடன் தன்னை வந்து சந்திக்குமாறு கவர்னர் கூறியிருந்தார் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை பெறுவதற்கு வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது. இது குறித்து முடிவு செய்ய சம்பந்தப்பட்ட கட்சியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்திக்க உள்ளார். இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னரை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பான்மை எண்ணுடன் தன்னை சந்திக்குமாறு கவர்னர் கூறியிருந்த நிலையில், விஜய்க்கு பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததா? அல்லது வேறு ஏதேனும் அரசியல் நகர்வுக்கு விஜய் திட்டமிட்டுள்ளரா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com