

தவெக தலைவர் விஜய் நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய், அங்கு கடல் குளித்து முடித்துவிட்டு விஸ்வரூப தரிசனம் செய்தார். முன்னதாக கோவில் சார்பில் நடிகர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதே போன்று செந்தூர் முருகனின் நினைவாக அவருக்கு வேல் ஒன்றும் பரிசளிக்கப்பட்டது.
திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உடனடியாக சென்னை திரும்பி இருக்கும் நடிகர் விஜய் அடுத்ததாக தனது இஷ்ட தெய்வமான ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் மராட்டிய மாநிலம் ஷீரடியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலில் நடிகர் விஜய் தரிசனம் செய்ய இருப்பதாக த.வெ.க. வட்டாரங்களில் கூறப்படுகிறது.