தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளும் இடம், நேரம் அறிவிப்பு


தவெக தலைவர் விஜய் நாளை பரப்புரை மேற்கொள்ளும் இடம், நேரம் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 Sept 2025 1:20 PM IST (Updated: 19 Sept 2025 1:23 PM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

சென்னை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில் பரப்புரை நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திலும், திருவாரூர் மாவட்டத்திலும் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காகத் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் குழுக்கள், வெற்றித் தலைவரின் சுற்றுப் பயணம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்.

நாளை நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கான இடம் மற்றும் நேரம் ஆகியவை பின்வருமாறு:

நாகப்பட்டினம் மாவட்டம்:

இடம்: புத்தூர் அண்ணா சிலை சந்திப்பு,

நேரம்: காலை 11 மணி

திருவாரூர் மாவட்டம்:

இடம்: நகராட்சி அலுவலகம் அருகில், தெற்கு வீதி

நேரம்: மாலை 3 மணி

வெற்றித் தலைவரின் ஒப்புதலோடு அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றித் தலைவருடன் அணிவகுத்து, வென்று காட்டுவோம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story