பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி

. 50,412 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் வெற்றி
Published on

2026 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக விஜய் களமிறங்கியுள்ள நிலையில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். 233 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட்டுள்ள நிலையில், விஜய் இரண்டு இடங்களில் களமிறங்கனார்.

இதனால் இந்த இரண்டு தொகுதிகளும் அரசியல் களத்தில் பெருமளவில் கவனம் ஈர்த்து இருந்தது. இதில் திருச்சி கிழக்கில் விஜய் வெற்றி முகம் பெற்றுள்ள நிலையில் பெரம்பூரில் வெற்றி பெற்றுள்ளார். 50,412 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வெற்றி பெற்றுள்ளார். பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்;

விஜய்: 1,12,279 வாக்குகள்

ஆர்.டி சேகர்: 62,307

எம்.திலகபாமா: 7,991

வெற்றித்தமிழன்; 4,841

X

Daily Thanthi
www.dailythanthi.com