பக்ரீத் பண்டிகை: தவெக தலைவர் விஜய் வாழ்த்து

இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிகவும் முக்கியமான பண்டிகையாக பக்ரீத் உள்ளது
பக்ரீத் பண்டிகை: தவெக தலைவர் விஜய் வாழ்த்து
Published on

ரம்ஜானுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் கொண்டாடும் மிகவும் முக்கியமான பண்டிகையாக பக்ரீத் உள்ளது. பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாள் அல்லது ஈத் அல்-அதா என்றும் அழைக்கிறார்கள். பக்ரீத் பண்டிகை, இறைத்தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக கொண்டாடப்படுகிறது.

இதனிடையே, உலகம் முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து பதிவில்,

உன்னத தியாகத்தை போற்றும் வகையில், பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். உயரிய தியாகத்தை போற்றும் இந்நன்னாளில் அனைவரிடத்தும் சகோதரத்துவம், சமத்துவம், சமய நல்லிணக்கம், பூரண மகிழ்ச்சி நீடித்து நிலைக்க உறுதி ஏற்போம்' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com