சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யும் சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யை கடந்த சில தினங்களுக்கு முன்பாக சீமான் கடுமையாக விமர்சித்து இருந்தார். விஜய்யின் கொள்கை தெளிவாக இல்லை எனவும், " எங்கள் லட்சியத்துக்கு எதிராக பெற்றவர்களே வந்தாலும் எதிரி எதிரி தான். அதில் தம்பியும் கிடையாது. அண்ணனும் கிடையாது.இது கெள்கை இல்லை. கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை" என மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

சீமானின் இந்த விமர்சனத்திற்கு விஜய் தரப்பில் இருந்து பதிலடி எதுவும் வரவில்லை. அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்திலும், யாரையும் தரம் தாழ்ந்து விமர்சிக்க வேண்டாம் எனவும் ஆதாரப்பூர்வமாக பதில் விமர்சனங்களை முன்வைக்குமாறு விஜய், நிர்வாகிகளை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com