பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து


பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
x

கோப்புப்படம்

தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துவதாக த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பிளஸ் 2 வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்க இருக்கின்றனர். இதற்காக தமிழகம் புதுச்சேரியில் 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story