தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர் விஜய் கடிதம்

சிசிடிவி கண்காணிப்பு மற்றும் வீடியோ ஆவணப்படுத்தும் குழுக்கள் மூலம் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு தவெக தலைவர்  விஜய் கடிதம்
Published on

சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் விஜய் கூறியிருப்பதாவது: வாக்காளர்களுக்கு குடிநீர், இருக்கை, நிழல் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். தேர்தல் நாளில் பிரதான சாலைகள் உள்ளிட்ட அனைத்து வழித்தடங்களிலும் காவல் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

சிசிடிவி கண்காணிப்பு மற்றும் வீடியோ ஆவணப்படுத்தும் குழுக்கள் மூலம் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். பெண் வாக்காளர்களுக்கு உதவ ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பெண் காவலர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பதற்றமான அதி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். புகாரளிக்கப்பட்ட எந்த ஒரு சம்பவத்திற்கும் விரைவான பதிலளிப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. தேர்தலுக்கான முழு முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com