

விஜய் கூறிய குட்டிக்கதை பின்வருமாறு:
ஒரு பெரிய கோவில் யானை இருந்ததாம். அதை யாராலும் ஏமாற்ற முடியாது. ஆனால் ஜெகஜால கில்லாடி ஒருவர் தேங்காய்க்குள் சுண்ணாம்பை வைத்து அதை ஏமாற்றி விட்டாராம். ஜெகஜால கில்லாடியின் நண்பர் அவரிடம் சென்று, “இந்த யானையை யாராலும் ஏமாற்ற முடியாதே, அதை எப்படி ஏமாற்றினாய்?” என்று கேட்டாராம். அதற்கு அவர் “அது தொழில் ரகசியம்” என்றாராம்.
பல வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அப்போது ஜெகஜால கில்லாடியின் நண்பர் அந்த யானைக் கதையை நினைவுபடுத்தி, “அந்த யானை ஏமாறாதே? ஒரே ஒரு முறை தெரியாமல் ஏமாந்திருக்குமோ?” என்று கேட்டாராம். அப்போது ஜெகஜால கில்லாடி, “என் திறமை மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? 2-வது முறையாக என்ன செய்கிறேன் பார்கிறாயா? மீண்டும் ஒருமுறை அந்த யானையை ஏமாற்றுகிறேன்,” என்று கூறி பஞ்சு வைத்து செய்யப்பட்ட போலி வாழைப்பழத்தை யானையிடம் நீட்டியுள்ளார்.
யானையும் அந்த பழத்தை வாங்குவது போல தும்பிக்கையை அவரிடம் கொண்டு வந்து, ஜெகஜால கில்லாடியை அப்படியே தூக்கி ஒரு சுற்று சுற்றி வீசியதாம். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்.
அடிபட்டு கிடந்த ஜெகஜால கில்லாடியிடம் அவரது நண்பர், “யானைக்கு நினைவுத்திறன் அதிகம்” என்றாராம்.
இந்தக் கதையில் யானை யாரென்றால் நமது வாக்காளர்கள். ஜெகஜால கில்லாடி யாரென்று கேட்டால், உங்கள் நினைவுக்கு யாராவது வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல ராஜா… அது யாராகவும் இருந்துவிட்டு போகட்டும்.இங்கு இருப்பது ஒன்றை யானை அல்ல; இரட்டை யானை, இரட்டை போர் யானைகள். என் சிங்கப் பெண்கள். உங்களை யாரும் எதையும் சொல்லி ஏமாற்ற முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.