

சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூரில் பணம் கேட்டு பொக்லைன் ஓட்டுநர் அழகுதுரை மீது தவெக நிர்வாகி ஜெய்கிருஷ்ணன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்கள் வேகமாக பரவியது. இதனையடுத்து அவர் தவெகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி இணை அமைப்பாளர் பொறுப்பில் இருந்தும் ஜெய்கிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளார். பழைய வீட்டை இடித்து கட்டுமான பொருட்களை இடம் மாற்றியவர் மீது தாக்குதல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.