தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி மாநகராட்சியை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடி, இன்னாச்சியார்புரம் 4 முனை சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் ரவுண்டானா பெரிய அளவில் இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது என தமிழக வெற்றிக் கழகத்தினர் தெரிவித்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி, இன்னாச்சியார்புரம் 4 முனை சந்திப்பில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டதால் அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரவுண்டானா பெரிய அளவில் இருப்பதால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுவதாக கூறி தமிழக வெற்றி கழகத்தினர் மாவட்ட பொறுப்பாளர் கிஷோர் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மாவட்ட துணைச் செயலாளர் கோல்டன், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் ராகவேந்திரா, நாடார் பேரவை வக்கீல் கார்த்திகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறிய அளவில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றி கழகத்தினர் தெரிவித்தனர்.

1 More update

Next Story