தவெக எம்.எல்.ஏ வழக்கு: சென்னை ஐகோர்ட்டை கண்டித்த சுப்ரீம் கோர்ட்

பெரிய கருப்பன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தவெக எம்.எல்.ஏ வழக்கு: சென்னை ஐகோர்ட்டை  கண்டித்த சுப்ரீம் கோர்ட்
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி, ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பனை தோற்கடித்தார். இதையடுத்து, மறு வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த கோரியும், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதிக்க கோரியும் பெரியகருப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. சீனிவாச சேதுபதி பங்கேற்க தடை விதித்தது. மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த அப்பீல் மனு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சீவ் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க தடை விதித்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. மேலும், பதில் அளிக்கும் வகையில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய பெரியகருப்பன் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட்டு 2 வார கால அவகாசம் வழங்கியது. சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு நடவடிக்கைகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை வழங்கியுள்ளது.

மேலும், எந்த அடிப்படையில் ஐகோர்ட் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தது?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, உடனடியாகத் தடையுத்தரவு பிறப்பித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இது ஒரு 'அடாவடித்தனமான' விஷயம் என்று தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com