

சென்னை,
சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் புதிதாக இணைந்தவர்களுக்கு பதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இக்கூட்டத்தில் முக்கிய அமைப்பு ரீதியான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்பாக முதல்-அமைச்சர் விஜய் டெல்லி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.