தி.மு.க.வின் பினாமியாக த.வெ.க. அரசு செயல்படுகிறது- வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

பா.ஜனதாவின் நிலைப்பாடு தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வருவது தான் என்று வேலூர் இப்ராஹிம் கூறினார்.
வேலூர் இப்ராஹிம்
Published on

பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், நேற்று மாலை கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அங்கு மதுகுடிக்க வந்தவர்களிடம் பாட்டிலுக்கு ரூ.10 வாங்குகிறார்களா? என்று விசாரித்தார். அதற்கு அவர்கள், வாங்குவதாக கூறினர்.பின்னர் வேலூர் இப்ராஹிம் அந்த மதுக்கடை விற்பனையாளரிடம், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது தவறு தானே. 50 மீட்டர் தூரத்தில் பஸ் நிலையம் உள்ளது. 500 மீட்டர் தூரத்துக்குள் இருந்தால் கடையை அகற்ற வேண்டும் என்ற உத்தரவு உள்ளது தெரியுமா?. பாட்டிலுக்கு ரூ. 10 வாங்குகிறீர் கள், இதை அரசு வாங்க சொல்கிறதா? என்று கேட்டார்.

அதற்கு விற்பனையாளர், அரசு வாங்க சொல்கிறது.காலி பாட்டில் கொடுத்ததும் ரூ.10-ஐ திரும்ப கொடுத்து விடுவோம் என்றார். இதையடுத்து வேலூர் இப்ராஹிம் நிருபர்களிடம் கூறியதாவது:-தி.மு.க. ஆட்சியின்போது பாட்டிலுக்கு ஏன் 10 ரூபாய் என்று செந்தில் பாலாஜியை விமர்சித்து முதல்-அமைச்சர் விஜய் பாடல் பாடினார்.

திமுகவின் பினாமி

ஆனால் தற்போது தி.மு.க. அரசின் பினாமி அரசாகவே த.வெ.க. அரசு செயல்படுகிறது. பா.ஜனதாவின் நிலைப்பாடு தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வருவது தான். பஸ் நிலையம் அருகே உள்ள இந்த கடையை மூட முதல்-அமைச்சர் விஜய் நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இல்லை என்றால் பா.ஜனதா சார்பில் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com