தமிழக வெற்றிக் கழக தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது.

இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது. தற்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை விஜய் முழு வீச்சில் செய்து வருகிறார். இதன்படி கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் அதிரடி திட்டங்களை த.வெ.க. தலைவர் விஜய் அடுத்தடுத்து அறிவித்து வருகிறார்.

கட்சி ரீதியாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 120 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது கட்சியில் புதிதாக சேருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக கட்சியில் சேருவதற்கு பிரபலங்கள் பலர் கட்சி தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

கட்சி உள் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பெரிய கட்சிகளைப் போல் த.வெ.க.விலும் மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, வழக்கறிஞர் அணி உள்பட 28 அணிகள் ஏற்கனவே இருக்கின்றன. இந்த சூழலில் தி.மு.க., அ.தி.மு.க.வில் இருப்பது போல் த.வெ.க.விலும் தொழிற்சங்கம் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதன்படி அதிகாரப்பூர்வ புதிய பொறுப்பாளர்கள் பற்றிய விவரம்:

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com