

சென்னை,
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"மக்களின் தீர்ப்பை ஏற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க கவர்னர், காலம் தாழ்த்தாமல் அழைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
தேவையற்ற காலதாமதம் என்பது மறைமுகமாக குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் செயலாக முடிந்துவிடும். எனவே, கவர்னர், சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் விஜய்யை முதல்வராகப் பொறுப்பேற்கவும், அமைச்சரவையை அமைக்கவும் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.