

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், போதைப்பொருளை ஒழித்துக்கட்டவும் சபதம் போட்டு செயல்படுகிறார். பதவியேற்ற மேடையிலேயே பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை அமைத்து உத்தரவிட்டார். போதைப் பொருளை ஒழித்துக்கட்ட தமிழகம் முழுவதும் 65 போதைப்பொருள் தடுப்பு சிறப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டார். இந்த 2 விஷயங்களிலும் போலீசார் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் குறிக்கோளாக உள்ளது. அவருடைய இந்த 2 குறிக்கோள்களையும் செயல்படுத்த உயர் போலீஸ் அதிகாரிகளும் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்தநிலையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் வீட்டின் மாடியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்திருக்கிறார். அருகில் உள்ளவர்களுக்கு ஒருவித சந்தேகம் ஏற்படவே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தனின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து
செடியை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ தனது வீட்டின் பால்கனியில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்திருக்கிறார். அக்கம் பக்கத்தினர் கண்டுபிடிக்காமல் இருக்க துணியை கட்டி மறைத்திருக்கிறார். கஞ்சா செடியின் பூக்களிலிருந்த வந்த வாசம் அவரை காட்டி கொடுத்துவிட்டது.
சென்னையில் வீட்டில் வைத்து கஞ்சா செடியை வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தவெக மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.