40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா: த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. கோரிக்கை

த.வெ.க. உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், தனது தொகுதி சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து சட்டசபையில் பேசினார்.
40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா: த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. கோரிக்கை
Published on

சென்னை,

40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று த.வெ.க. பெண் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

கனிமொழி சந்தோஷ்

தமிழக சட்டசபையில் இன்று 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று த.வெ.க. உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் (கவுண்டம்பாளையம்) பேசினார். அப்போது, அவர் தொகுதி சார்ந்த பிரச்சினைகளை முன்வைத்து பேசியதாவது:-

அரசு புறம்போக்கு நிலங்களில் கடந்த 40–50 ஆண்டுகளாக வசித்து வரும் மக்கள், மின் கட்டண ரசீதுகள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக வைத்திருந்தும் இதுவரை வீட்டு மனைப் பட்டா கிடைக்காமல் உள்ளனர். பட்டா இல்லாததால் வங்கிக் கடன் பெற முடியாமலும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

வீட்டு மனைப் பட்டா

எனவே, நீண்டகாலமாக வசித்து வரும் தகுதியான மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி, அவர்களின் வாழ்வுரிமையையும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, அறுவை சிகிச்சை மையம், விபத்து சிகிச்சை மையம், அவசர சிகிச்சை மையம் ஆகியவற்றை ஏற்படுத்துவதுடன், தேவையான நவீன மருத்துவ உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com