த.வெ.க. சார்பில் நாளை 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆண்டு தோறும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது
த.வெ.க. சார்பில் நாளை 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா
Published on

மாணவ, மாணவியரின் கல்வி ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆண்டு தோறும் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த விருது வழங்கும் விழாவில் தமிழகம், புதுச்சேரியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருது, பரிசு பொருட்களை வழங்கி கவுரவித்து வருகிறார்.

அந்த வகையில், த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா தற்போது 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. முதற்கட்டமாக கடந்த 30ம் தேதி நடைபெற கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழகத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதிகளில் 600 மாணவ, மாணவிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கல்வி விருது வழங்கி கவுரவித்தார்.

இந்நிலையில், த.வெ.க. சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறும் இந்த விழாவில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் 3 இடங்களை பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு த.வெ.க. தலைவர் விஜய் பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com