10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்

10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9 மணிக்கு வெளியானது.
சென்னை,
கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. மொத்தம் 93.80 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 4,00,078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.
இந்தநிலையில், கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் (474) பெற்று இரட்டையர் கவிதா, கனிஹா அசத்தி உள்ளனர். அவர்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.