4 ஆண்டுகளில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில்1015 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன

4 ஆண்டுகளில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில்1015 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என்பது உள்ளிட்ட ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.
4 ஆண்டுகளில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில்1015 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன
Published on

4 ஆண்டுகளில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில்1015 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என்பது உள்ளிட்ட ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

தகவல் அறியும் சட்டத்தில் பதில்

தென் மாவட்டங்களில் மிகப்பெரிய அரசு ஆஸ்பத்திரியாக மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆஸ்பத்திரி வளாகத்தில், மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கென தனி கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறப்பு, இறப்பு, கருக்கலைப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் எழுப்பி இருந்தார். அதற்கு மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 60 ஆயிரத்து 717 குழந்தைகள் பிறந்துள்ளன அதாவது, 2019-ல் 13 ஆயிரத்து 735, 2020-ல் 15 ஆயிரத்து 835, 2021-ல் 15 ஆயிரத்து 568, 2022-ல் 15 ஆயிரத்து 579 குழந்தைகள் பிறந்துள்ளன. அவர்களில் 1015 குழந்தைகள் இரட்டையர்களாவர்.

கருக்கலைப்பு

இந்த காலகட்டத்தில் 4 ஆயிரத்து 312 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-ம் ஆண்டில் மட்டும் அதிகமாக 1,413 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. அறுவைச் சிகிச்சை மூலம் 21 ஆயிரத்து 685 குழந்தைகள் பிறந்துள்ளனர். மொத்த பிரசவத்தில் 64 சதவீதம் சுகப்பிரசவம் ஆகும்.

பிரசவத்தின்போது தாய்மார்கள் இறப்பு கடந்த 4 ஆண்டுகளில் 197. கடந்த 2021-ம் ஆண்டில் 69 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு அப்படியே பாதியாக குறைந்து 30 பேர் இறந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com