கோவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்ற அதிசயம்

இரட்டையர்கள் நிரஞ்சன் மற்றும் நிவேதா இருவரும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 530 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கோவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் பெற்ற அதிசயம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவென்யூவைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி ஜெயசுதா. இந்த தம்பதிக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் வடவள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தனர்.

இந்த நிலையில் அண்மையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய 2 பேரும் 600-க்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். சிறுவயதில் இருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்தாலும், படிப்பு விஷயத்தில் போட்டி போட்டு படிக்கும் இரட்டையர்கள் நிரஞ்சன் மற்றும் நிவேதா பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர்களது பெற்றோர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com