தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்த 2 நடிகர்கள்:யார் யார் தெரியுமா?

நேற்று நடந்த புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் அவர்கள் அமைச்சராக பதவி ஏற்று கொண்டனர்.
தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்த 2 நடிகர்கள்:யார் யார் தெரியுமா?
Published on

சென்னை,

சட்டசபை தேர்தலில் நடிகர்கள் ஸ்ரீநாத், விஜய் தமிழன் பார்த்திபன் ஆகியோர் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராகவும், இயக்குனராகவும் திகழ்ந்தவர் ஸ்ரீநாத். விஜய்யுடன் "வேட்டைகாரன், மாஸ்டர், ஜனநாயகன்" உள்பட பல படங்களில் நடித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய்யின் நெருங்கிய நண்பரான இவர் தூத்துக்குடி தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் தூத்துக்குடி தொகுதி எம்.எல்.ஏ.வான ஸ்ரீநாத் அமைச்சராக (மீன்வளம், மீன்வள மேம்பாட்டு கழகம்) பதவி ஏற்றார்.

அதேபோல், சேலம் தெற்கு தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் விஜய்யுடன் "ஜில்லா, கத்தி" மற்றும் சூர்யா நடித்த "சிங்கம்-2", விஷாலுடன் "பூஜை" உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து த.வெ.க.வில் மாவட்ட செயலாளராகவும் தீவிரமாக பணியாற்றினார். சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான விஜய் தமிழன் பார்த்திபன் (மோட்டார் வாகன சட்டங்கள் நிர்வாகம், போக்குவரத்து, தேசியமயமாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் மோட்டார் வாகன சட்டங்கள்) நேற்று நடந்த பதவி ஏற்பு விழாவில் அமைச்சராக பதவி ஏற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com