போலி தயாரிப்புகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது


போலி தயாரிப்புகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு பேர் கைது
x

பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசன் தெருவில் உள்ள வீட்டில் அதிரடியாக நடத்திய சோதனையில் ஹேமலதா என்பவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை அமலாக்கப்பணியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை அயனாவரத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவுக்கு 100 வருட பாரம்பரியமிக்க எல்.ஐி. பெருங்காயத்தூள் மற்றும் கட்டி பெருங்காயத்தை போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக குமரவேல் என்பவர் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில் கூடுதல் காவல்துறை இயக்குநர் அமலாக்கப் பணியகம் அவர்கள் உத்தரவின் பேரில், காவல்துறை தலைவர், குற்றம் மற்றும் காவல் கண்காணிப்பாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அவர்கள் சென்னை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து பழைய வண்ணாரப்பேட்டை, சீனிவாசன் தெருவில் உள்ள வீட்டில் அதிரடியாக நடத்திய சோதனையில் ஹேமலதா என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து போலி எல்.ஐி. பெருங்காயத்தை வைப்பதற்காக தயாரிக்கப்பட்ட வெளிப்புற பெட்டி. பேக்கிங் பொருள், அரபு பசைதூள் 40 கிலோ, காலி அட்டை பெட்டி-20, போலியாக தயாரிக்கப்பட்ட எல்.ஐி. அட்டை-750, எல்.ஐி ஸ்டிக்கர் ரோல்-15, எல்.ஐி. பெட்டி மூடி-100 ஆகிய 34,260 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும் திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில் ஐ.டி.சி. சிகரெட் பிராண்டுகள் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக முருகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர், திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அவர்கள் தலைமையில் குழு அமைத்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் அதிரடியாக சோதனை நடத்தி அபுதாஹிர் என்பவரை கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூபாய் 6.80 லட்சம் மதிப்புள்ள போலி Gold Flake Honey Dew , Lights , Kings (Big) – 2180 பாக்கெட்கள், Gold Flake (Filter), Honey Dew (Small) 3100 பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story