நெல்லையில் வீடு புகுந்து பேட்டரி, இன்வெர்ட்டர்கள் திருட்டு: 2 பேர் கைது

நெல்லையில் இருவேறு இடங்களில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ரூ.55 ஆயிரம் மதிப்புடைய 2 பேட்டரிகள் மற்றும் 2 இன்வெர்ட்டர்களை திருடிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழில்நகர் மற்றும் ஆனையர்குளம் பகுதிகளில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சுமார் ரூ.55 ஆயிரம் மதிப்புடைய இரண்டு பேட்டரிகள் மற்றும் இரண்டு இன்வெர்ட்டர்களை திருடிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீசார் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த ஜான் மகன் ஜோசப்எபினேசர் (வயது 33) மற்றும் இலந்தைகுளம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் முத்து(23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து திருடுபோன பொருட்களை அவர்களிடம் இருந்து மீட்டு, அவர்கள் 2 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Related Tags :
Next Story






