

வாணியம்பாடி,
திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், திருப்பத்தூர் மாவட்ட ஏஎஸ்பி கண்காணிப்பாளர். அக்க்ஷய் அனில் வாகரே, தலைமையில் திருப்பத்தூர் நகர பகுதியில் நடைபயண ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட ஏஎஸ்பி உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த அதிரடி ரோந்துப் பணியின் போது, பழைய குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இரவு நேரங்களில் தேவையின்றி சுற்றும் நபர்களை எச்சரித்து அனுப்பவும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். குறிப்பாக, பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
போலீசார் அந்த ஷேர் ஆட்டோவை சோதனையிட்ட போது, அதில் பயணிகள் யாரும் இல்லாமல், அதற்கு பதிலாக பல மதுபான பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெட்டிகளை திறந்து பார்த்த போது, அவற்றில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் இருப்பது உறுதியானது. மொத்தமாக 600 மது பாட்டில்கள் இருந்தது.
அந்த பெட்டிகளை திறந்து பார்த்த போது, அவற்றில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட அரசு டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் இருப்பது உறுதியானது. மொத்தமாக 600 மது பாட்டில்கள் இருந்தது.
இதனை தொடர்ந்து ஷேர் ஆட்டோ மற்றும் மதுபான பெட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35) மற்றும் பாபு (32) ஆகியோர் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து நாட்றம்பள்ளி போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து சுமார் 600 அரசு மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஷேர் ஆட்டோவையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.