தூத்துக்குடியில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே 2 பேர், பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்-அம்பாள் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் சற்குணமுத்து (வயது 40), வெள்ளரிக்காயூரணியைச் சேர்ந்த மருதநாயகம் மகன் சித்திரைச்செல்வன் ஆகிய 2 பேரும் நாசரேத் காமராஜர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களை அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த நாசரேத் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அரிவாளை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





