பேட்டையில் மது அருந்த பணம் கேட்டு கொலை மிரட்டல்: 2 பேர் கைது

நெல்லை மாநகரம் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தவரை 2 பேர் வழிமறித்து மது அருந்த பணம் கேட்டு, அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
பேட்டையில் மது அருந்த பணம் கேட்டு கொலை மிரட்டல்: 2 பேர் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம் பேட்டை ITI பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் (வயது 47) என்பவரை வழிமறித்த பேட்டையை சேர்ந்த கார்த்திக்(23), தென்பத்து பகுதியை சேர்ந்த சுரேஷ்(23) ஆகியோர் மது அருந்த பணம் கேட்டு, அவதூறு வார்த்தைகளால் பேசி, அச்சுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மேற்சொன்ன 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com