சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இருவர் போக்சோ வழக்கில் கைது

சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இருவரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் 17 வயது சிறுமியும், அவருடைய தாயாரும் தங்களுடைய வீட்டின் பின் பகுதியில் குளித்து கொண்டிருந்தனர். அவர்கள் குளிப்பதை அங்கு மறைந்திருந்த இருவர், செல்போன் மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இதை பார்த்த சிறுமி கூச்சல் போட்டுள்ளார். இதனால் வீடியோ எடுத்த இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தரப்பில் வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உத்தாணி கீழத்தெருவை சேர்ந்த ராஜலிங்கம் மகன் ராஜதுரை (30 வயது), அவருடைய நண்பர் பாபநாசம் பூஞ்சேரி கீழத்தெருவை சேர்ந்த தர்மேந்திரன் மகன் விக்னேஷ் (26 வயது) ஆகிய இருவரும் வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ராஜதுரை, விக்னேஷ் இருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com