கொலை முயற்சி, திருட்டு வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சேரன்மகாதேவி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலை முயற்சி, திருட்டு வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மதுரை மாவட்டம், கடைச்சிநேந்தல் பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் மணிசங்கர் (வயது 20) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகுமார், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோல் சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சிவசந்தோஷ்(19) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சேரன்மகாதேவி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தர்மராஜ், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதன்படி திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரைப்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவுப்படி நேற்று மேற்ெசான்ன 2 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com