

தூத்துக்குடி,
தூத்துக்குடி முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி செம்மண் திருடிய வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 38) மற்றும் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த முத்துராஜா(27) ஆகிய 2 பேர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு முறப்பநாடு, செய்துங்கநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மேற்சொன்ன 2 பேரையும் நேற்று சம்பந்தப்பட்ட போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.