பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை டவுனில் உள்ள ஒரு தனியார் பைக் ஷோரூமில் பொன்னாக்குடியைச் சேர்ந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசி, விளம்பர பலகையை சேதப்படுத்தினர்.
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி டவுண், நெல்லை கண்ணன் சாலையில் உள்ள பாஸ்கர் மகன் சிவரத்தினம் என்பவருடைய தனியார் பைக் ஷோரூமில் 14.5.2025 அன்று திருநெல்வேலி மாவட்டம், பொன்னாக்குடியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் இசக்கிமுத்து (வயது 19), ராமர் மகன் முத்துக்குமார்(18) ஆகிய 2 பேரும் பெட்ரோல் குண்டு வீசி, விளம்பர பலகையை சேதப்படுத்தினர். இது தொடர்பான வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் அவர்கள் 2 பேரும் ஈடுபட்டனர்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், உதவி கமிஷனர் (டவுண் சரகம்) அஜுகுமார் மற்றும் திருநெல்வேலி டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் (குற்றம்) ஜுடி ஆகியோரின் பரிந்துரையின்பேரில், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நேற்று (14.6.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com