

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சிறுமாங்காடு கிராமத்தில் பனை மரத்தில் நுங்கு பறிக்கும் போது மின் மாற்றியில் சிக்கிய நுங்கை, இரும்புக் கம்பி கொண்டு எடுத்த கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதே கிராமத்தைச் சேர்ந்த டில்லி கணேஷ் (17), தட்சிணா மூர்த்தி (17) இருவரின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு காஞ்சிபுரம் அரசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.