கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் மாயம்

கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 2 பேர் மாயமானார்கள்.
கோவளத்தில் ராட்சத அலையில் சிக்கிய என்ஜினீயரிங் மாணவர்கள் 2 பேர் மாயம்
Published on

ராட்சத அலையில் சிக்கினர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கோவளம் கடற்கரைக்கு நேற்று வண்டலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கோவளம் கடற்கரைக்கு வந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் கடலில் இறங்கி குளித்தனர்.ராட்சத அலையில் சிக்கிய அவர்கள் கடல் அலைக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.

மாணவர்கள் மாயம்

அங்கு இருந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அவர்களில் 5 பேரை மீட்டனர். அவர்களுடன் வந்த 2 மாணவர்களை கடல் அலை இழுத்து சென்று மாயமானார்கள்.இது குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு கோவளம் மீனவர்கள் உதவியுடன் படகு மூலம் மாயமான 2மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com