ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்

பாலங்கள் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் காரணமாக ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு-செங்கோட்டை ரெயில் சேவையில் 2 நாட்கள் மாற்றம்
Published on

ஈரோடு,

ஈரோடு- கரூர் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பாலங்கள் பராமரிப்பு, சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன்காரணமாக ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை), வருகிற 13-ந்தேதி ஆகிய நாட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி- ஈரோடு பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்-56809) கரூர் சந்திப்பு வரை மட்டுமே செல்லும். அதாவது கரூரில் இருந்து ஈரோடு வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது. ஈரோடு - செங் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்- 16845) கரூர் வரை மட்டுமே இயங்கும். அதாவது ஈரோட்டில் இருந்து கரூர் வரை பகுதி ரத்தாகிறது. இதேபோல் பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16844) பாசூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி கள் நிறைவுபெற்ற பின்னர் பாசூரில் இருந்து திருச்சி வரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயிலாக இயக்கப்படும்.

மேலும் கோவை- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16322) கோவை- திண்டுக்கல் இடையே மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் போத்தனூர், பொள்ளாச்சி, பழனி வழியாக செல்லும். கோவை வடக்கு, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரோடு, சோமனூர், திருப்பூர், ஊத்துக்குளி, ஈங்கூர், ஈரோடு, பாசூர், கொடுமுடி, புகளூர், கரூர், பாளையம், எரியோடு ஆகிய ரெயில் நிலையங்களில் நிற்கும். மேலும் போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களில் மாற்று நிறுத்தம் ஏற்படுத்தப்படும் என்று சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com