ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்திவைப்பு

பராமரிப்பு பணிகள் காரணமாக ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
ஈரோடு வழியாக செல்லும் 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்திவைப்பு
Published on

ஈரோடு,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி- வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட தண்டவாள பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக ஈரோடு வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம்- டாட்டாநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-18190) நாளை (திங்கட்கிழமை), வருகிற 8, 11-ந்தேதிகளில் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

இதேபோல் ஆலப்புலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) நாளை, வருகிற 8, 11-ந்தேதிகளில் ஏதாவது ஒரு ரெயில் நிலையத்தில் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். இந்த தகவல் சேலம் கோட்ட ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com