ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக இரண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது

பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் லஞ்சம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக இரண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது
Published on

சென்னை,

சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

திருமுல்லைவாயில் சி.டி.எச். சாலையில் அழகு நிலையம் மற்றும் ஸ்பா நடத்தி வரும் பெண் உரிமையாளரிடம், மாதந்தோறும் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் எனக் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.20 ஆயிரம் வழங்குமாறு வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் உரிமையாளர் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அமுல் ஆகியோர் காவல் நிலையத்திலேயே கையும் களவுமாக பிடிக்கப்பட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர்கள் கைது

பின்னர், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான அதிகாரிகள் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com