போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது


போதைப்பொருள் வழக்கில் மேலும் இருவர் கைது
x

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே தனக்கு ஜாமீன் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் ஸ்ரீகாந்த் மனு தாக்கல் செய்து இருந்தார். அதேபோல, இதே வழக்கில் கைதான மற்றொரு நடிகர் கிருஷ்ணாவும் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்களை நேற்று விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளு படி செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு போதைப்பொருட்களை விநியோகம் செய்த வழக்கில் அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகிய மேலும் 2 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் போதைப்பொருள் சப்ளையர் கெவினின் கூட்டாளிகள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story